Date:

“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்..!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கும் நோக்கில், இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் அவர்களின் தலைமையிலான சவூதி அரேபிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலும், மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் (KSrelief) வழங்கி வரும் மனிதாபிமானப் பணிகளின் தொடர்ச்சியாக, இம் மையம் பார்வையின்மை மற்றும் பார்வையின்மையோடு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை நிறைவு செய்ததது.

இத்திட்டமானது, கிழக்கு இலங்கையில் சம்மாந்துறை மற்றும் சுப்ரகமுவா மாகாணத்தில் எம்பிலிபிட்டிய போன்ற பகுதிகளில் உள்ள இரண்டு அரச மருத்துவமனைகளில் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் வெற்றி கண்டுள்ளது.

இந்தத்தன்னார்வாத் திட்டத்தின் போது பின்வரும் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணம், சம்மாந்துறை பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு:மருத்துவ பரிசோதனைகள்: 4,336
• லென்ஸ் பொருத்துதல்கள்: 416
• மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,028
• அறுவை சிகிச்சைகள்: 428

சபரகமுவ மாகாணம், எம்பிலிபிட்டிய பகுதியில் உள்ள தள வையத்தியசாலையில் வழங்கப்பட்ட மருத்துவ சேவைகள் பின்வருமாறு::
• மருத்துவ பரிசோதனைகள்: 4,300
• லென்ஸ் பொருத்துதல்கள்: 407
• மூக்குக் கண்ணாடி விநியோகம்: 1,010
• அறுவை சிகிச்சைகள்: 410

இந்த மனிதாபிமான முயற்சியானது, கண் பார்வையை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சியானது, அவர்களை தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், சமூக செயற்பாடுகளில் பங்கேற்கவும் உதவுகிறது.
இந்த முயற்சியானது மருத்துவ அம்சத்துடன் மட்டும் நின்றுவிடாமல், கண் நோய்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட விழிப்புணர்வு திட்டங்கள் மூலம் உள்ளூர் சமூகங்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நிலையான சுகாதாரப் பராமரிப்புக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. இந்த முயற்சிகள் இலங்கைக் குடியரசின் ஆயிரக்கணக்கான பயனாளிகளிடத்தில் உறுதியான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், அவர்களிடத்தில் மீளவும் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களின் பார்வைக் குறைபாடுகளால் ஏற்படும் சவால்களை சமாளிக்கவும் இது உதவியுள்ளது.

மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தின் (KSrelief) புள்ளிவிவரங்களின்படி, இந்த மையம் இதுவரையில் இலங்கையில் 25 திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதன் மொத்தச் செலவு $15 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கும் அதிகமாகும்.

இரு புனிதஸ்த்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதம மந்திரியுமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் ஆல் ஸுஊத் ஆகியோரின் தலைமையில், சவூதி அரேபியா, தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் மனிதாபிமான முயற்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது. குறிப்பாக சுகாதாரத் துறையில், “சவூதி நூர் ” திட்டம் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள கண் நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபைத் தலைவர் பலி

அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வெலிகம பிரதேச...

ஒரே நாளில் 20,000/- குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் இன்றைய தினம் (22) தங்கத்தின் விலை 20,200 ரூபாய் குறைந்துள்ளது. செட்டியார்...

தற்போதைய வானிலை காரணமாக டெங்கு அதிகரிக்கும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக இலங்கை முழுவதும் நுளம்புகளின் அடர்த்தி...

சுகாதார அவசரநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

தற்போதைய சீரற்ற வானிலையால் ஏற்படும் சுகாதார அவசரநிலை மற்றும் வைத்திய உதவிகள்...