பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மெதகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், தனது நண்பர்களுடன் ரம்புக்கனையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் திஸ்மல்பொல ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய நிலையில் நடைமேடைக்கு பதிலாக ரயில் பாதையில் காலடி வைத்துள்ளார்.
இதன்போது குறித்த சிறுவன் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலுடன் மோதியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.