பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைத்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒரு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
செப்டம்பர் 27, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டது.
இருப்பினும், ஜனாதிபதி ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பொதுப் பாதுகாப்பைப் பராமரிக்க முப்படைகளையும் அழைக்கும் நடைமுறை, அடுத்தடுத்த அரசாங்கங்களால் மீண்டும் மீண்டும் செய்யப்படும் நடைமுறையாக மாறியுள்ளது