கொழும்பு மாநகர சபையின் அலுவலக உதவியாளர் ஒருவர், நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்ததாக வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீண்ட காலமாக தனது அலுவலகத்தில் ஐஸ் மற்றும் ஹெரோயினை சூட்சுமமாக பொதி செய்து நகர சபை ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் கெம்பல் பூங்காவிற்கு அருகிலுள்ள கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.
வலான ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு செப்டம்பர் 22 அன்று கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், சந்தேக நபரிடம் இருந்து 20,000 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தடுப்பு உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன