Date:

எக்ஸ்பிரஸ் பேரழிவுக்கான இழப்பீட்டை பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

எக்ஸ்பிரஸ் பேரழிவுக்கான இழப்பீட்டை பெற கட்சி, அரசியல் பேதங்களை கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர், உயர் நீதிமன்றம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக அறவிட உத்தரவிட்டது.

ஆனால் அந்த இழப்பீட்டை வழங்க சிங்கப்பூரில் உள்ள அந்த கப்பலின் நிறுவனம் நிராகரித்துள்ளது.

81 கொள்கலன்களில் உயிருக்கு ஆபத்தான பிளாஸ்டிக் துகள்கள், அதிக அளவு அமிலம் கசிந்து சுற்றுச்சூழலில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.

கட்டார் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்த கப்பல் வருகையை நிராகரித்தபோதும், நமது நாட்டு கடல்பரப்பினுள் பயணிக்க அனுமதியளித்ததைத் தொடர்ந்து பெரும் நஷ்டமே ஏற்பட்டது.

இன்றும் கூட, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

எனவே, இந்த பிரச்சினையில் நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்து குறித்த நிறுவனத்திற்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...