H 1 B விசாவில் மாற்றம் செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள ஐடி ஊழியர்கள் அவசர அவசரமாக அமெரிக்க சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ஒரு காதல் ஜோடி இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். டிரம்பின் அறிவிப்பால் காதலன், தன்னுடைய காதலியை விட்டு பிரிந்து அவசர அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளார். இதுதொடர்பாக அவரின் காதலி வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்றதில் இருந்து, தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். நட்பு நாடாக இருந்த இந்தியா – அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. ஜனாதிபதியாக பதவியேற்ற சில மாதங்களிலேயே விசா விஷயத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுத்தார்.