ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நிரபராதிகள் கொலை செய்யப்பட்டது ஏன் என்பது தெரிந்தாக வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதனை தெரிந்துகொள்ள வேண்டியது தமது உரிமை எனவும் தாங்கள் அரசாங்கத்திடம் தலைவர்களிடம் பரிசுகள் கேட்கவில்லை என்றும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் அழுத்தங்களை கொடுத்து வருவது நாட்டு தலைவர்களுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அல்லவென கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டார்.
ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள கதையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் தேவை எனவும் அரசியல் தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக பேராயர் தெரிவித்துள்ளார்.