சர்ச்சைக்குரிய விசா ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ஹர்ஷா இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, செவ்வாய்க்கிழமை (23) விதித்தது.
நீதியரசர்களான யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
2024 செப்டம்பர் 25, அன்று, சர்ச்சைக்குரிய விசா ஒப்பந்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக ஹர்ஷா இலுக்பிட்டியவை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் முடியும் வரை விளக்கமறியலில் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.