முல்லேரியா பொலிஸ் பிரிவில், கடுவெல-அங்கொட பிரதான வீதியின் அங்கொட சந்திப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடுவெலயிலிருந்து அங்கொட நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கோதடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சடலம் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.