பாக்ராம் விமானத் தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் “விரைவில்” திருப்பித் தர வேண்டும். திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விடயங்கள் நடக்கும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ட்ரம்பின் எச்சரிக்கையை தலிபான் அரசு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் தலைமை அதிகாரி பஸிஹுதீன் ஃபித்ரத்,
“சிலர் அரசியல் ஒப்பந்தங்கள் மூலம் தளத்தை மீண்டும் பெற பேச்சுவார்த்தை நடந்த விரும்புகின்றனர். ஆனால் எந்த ஒரு ஒப்பந்தத்தின் மூலமும் ஆப்கானிஸ்தானின் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது.” என்று தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக உத்தியோகரபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்ட ஆப்கானிஸ்தான் அரசு, “நாட்டின் சுதந்திரம் மற்றும் நிலையான ஒருமைப்பாடு மிக முக்கியமானவை” என தெரிவித்துள்ளது