Date:

பயன் அற்று போகும் பைஸர் மற்றும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள்

பைஸர் மற்றும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A.30 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து இலங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.

தடுப்பூசியால் உருவாகும் நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதில் புதிய மாறுபாடு மிகவும் திறன் வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலகம் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளும் புதிய மாறுபாடு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன என்றும் இலங்கையும் அவ்வாறே எச்சரிக்கையுடன் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரவிருக்கும் குளிர்காலத்தில் இந்த மாறுபாடு வேகமாக பரவினால், உலகில் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு நிலைமை ஏற்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.

குறித்த அறிவிப்பை அடுத்து மக்கள் மத்தியில் பைஸர் மற்றும் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளுக்கு பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...