உரிமம் இல்லாமல் யானை வைத்திருந்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அலி ரொஷன் என்று அழைக்கப்படும் நிராஜ் ரொஷானுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த தண்டனையை இன்று (19) அறிவித்துள்ளது