வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் வர்த்தகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு சுவைகள் கொண்ட இந்த சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்காக பாடசாலை மாணவர் ஒருவருக்கு அவர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஒரு சிகரெட்டை மாணவருக்கு 100 ரூபாவிற்கு வர்த்தகர் வழங்கியுள்ளதுடன், அம்மாணவர் பாடசாலையில் சிகரெட் ஒன்றை 200 ரூபாவிற்கு விற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அதே பாடசாலையின் மாணவர் ஒருவர் அதிபருக்கு அளித்த முறைப்பாட்டுக்கு அமைய சிகரெட்டுகளை விற்பனை செய்த மாணவனை அழைத்து வந்து சோதனை செய்த போது, மாணவரிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர், தனமல்வில பொலிஸ் பரிசோதகருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, குறித்த வர்த்தக நிலையம் சோதனை செய்யப்பட்டு, வர்த்தகரிடம் இருந்த 690 சிகரெட்டுகளும், சிகரெட்டுகளை விற்று ஈட்டிய 360,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்