தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (18) ஹல்லோலுவவை தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் அறிவுறுத்தியது.
நாரஹேன்பிட்டி பகுதியில் அவரது வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக துசித ஹல்லோலுவ முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கொள்ளுப்பிட்டி பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவு நடத்திய சோதனையின் போது அவர் ஆகஸ்ட் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.