Date:

அதிகரிக்கும் பதற்றம் : காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களில் நேற்று மட்டும் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது.

காசா சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, அக்டோபர் 7, 2023 முதல் இதுவரை 65,062 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165,697 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிப் படை 150 க்கும் மேற்பட்ட முறை காசா நகரை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சம் அடைந்துள்ள கூடார முகாம்களுக்கு அருகில் உள்ள உயரமான கட்டிடங்களை தரைமட்டமாக்கியுள்ளன.

இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள் காசா நகரத்தின் பெரும் பகுதிகளை அழித்தன. சுமார் 90% மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தத் தாக்குதல்களால், பல வைத்தியசாலைகளும் சேதமடைந்துள்ளன.

காசா நகரில் இருந்து தென் பகுதிக்கு மக்கள் வெளியேறுவதற்காக 2 நாட்களுக்கு புதிய வழித்தடம் ஒன்றை இஸ்ரேல் திறந்துள்ளது. வாகனங்களிலும், கால்நடையாகவும் பாலஸ்தீன மக்கள் காசா நகரை விட்டு வெளியேறி வருகின்றனர்.

வான், கடல் மற்றும் நிலத்திலிருந்து நகரம் மீது கடுமையான குண்டுவீச்சுகள் நடத்தப்பட்டதாகவும், மிகப்பெரிய வெடிச்சத்தங்கள் கேட்ட வண்ணம் உள்ளதாகவும் தப்பிச் செல்லும் மக்கள் தெரிவித்தனர்.

உடல்கள் எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன. 2 வருடப் போரில் தாங்கள் எதிர்கொண்ட மிகக் கடுமையான குண்டுவீச்சுகள் இவை என்று மக்கள் விவரிக்கின்றனர்.

இதற்கிடையே காசா நகர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தியுள்ளது. கட்டார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, இஸ்ரேல் இனப்படுகொலையை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...