Date:

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 7 நாட்களுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் மல்சா கொடித்துவக்கு சற்றுமுன்னர் உத்தரவிட்டார்.

அண்மையில் மித்தெனிய பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...