ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கட்டாயம் வெல்ல வேண்டிய ஐக்கிய அரபு அமீரகத்துடனான போட்டியானது இன்றிரவு நடைபெறவுள்ள நிலையில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கிரிக்கெட் சபையின் நள்ளிரவு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவுடனான போட்டியின்போதான கைகுலுக்கல் சர்ச்சை தொடருகின்ற நிலையில் நேற்று தமது செய்தியாளர் மாநாட்டை பாகிஸ்தான் இரத்துச் செய்திருந்தது.