ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இன்று முற்பகல் நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிரியெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.