Date:

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு 2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் நடத்தை முறையை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு குறித்த அறிக்கையை திட்டவட்டமாக நிராகரித்ததாகக் கூறியுள்ளதுடன், இது தவறான சித்தரிக்கப்பட்ட அறிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாக மாற்றும் வகையில் டிஜிட்டல் கைரேகை...

புறக்கோட்டை ஹோட்டல் கழிப்பறையில் தோட்டாக்கள்!

கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறைllயில் உள்ள குப்பைத் தொட்டியில்...