Date:

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாக மாற்றும் வகையில் டிஜிட்டல் கைரேகை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது அதிகாரிகளுக்கான டிஜிட்டல் கைரேகைகளை அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்று (15) பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதுதான். மக்கள் எதிர்பார்க்கும் திறமையான பொது சேவையை உருவாக்குவதே தனது நோக்கம் என்றும், இந்த புதிய தொழில்நுட்பத்தை கிராம சேவையாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அலுவலகப் பணிகளை எளிதாகவும் வினைத்திறனாகவும் மாற்றுவதற்காக, 2006ஆம் ஆண்டு 19ஆம் இலக்க மின்னணு பரிவர்த்தனை சட்டத்தின்படி, உள்நாட்டலுவல்கள் பிரிவின் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அதிகாரிகளின் கையொப்பங்களை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறை இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’பங்கர் பஸ்டர்’ குண்டுகளால் அமெரிக்கா அதிரடி தாக்குதல்

மத்திய கிழக்கில் நிலத்தடி பதுங்கு குழிகள் மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள...

உச்சக்கட்டப் பதற்றத்தில் மத்திய கிழக்கு

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை தலைவர் அலி லாரிஜானி மற்றும் பாசிஜ்...

இரண்டு CTB பஸ்கள் மோதி விபத்து

ஹம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில 'துருசெவண' பகுதிக்கு அருகில்...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை...