Date:

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

இதற்காக எதிர்பார்க்கப்படும் செலவு 424 மில்லியன் ரூபாய் ஆகும்.

புதுப்பித்தலின் கீழ், புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பேருந்து நிலையத்தில் நிறுவப்படவுள்ளன.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கிடையில், க்ளின் சிறிலங்கா திட்டத்தின் கீழ் மருதானை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கையும் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ரயில் நிலையத்தின் வரலாற்றுத் தன்மைக்கு பாதிப்பு விளைவிக்காத வகையிலும் அதன் பழமை தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் – அரசாங்கம்

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வந்தால் விரைவில்...

தீவிரமாகும் தொழிற்சங்க நடவடிக்கை! மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிரான சட்டப்படி வேலை...

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். அரிசி...

சீகிரிய கண்ணாடி சுவற்றில் கிறுக்கிய இளம் பெண் கைது

சீகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதியதற்காக 21 வயதுடைய...