இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கட்டாரின் வெளிவிவகார அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைகியுடன் இன்று சனிக்கிழமை (13) தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதன்போது, இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கையின் கவலைகளை வெளிப்படுத்தினார்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டியுள்ளார்.
இலங்கை நேரப்படி சனிக்கிழமை (13) காலை 11:30 மணிக்கு இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது