நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி,
“சுசீலா கார்க்கி அவர்கள் நேபாளத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தலைமை, நேபாளத்தை அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கு இட்டுச்செல்லும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்,” என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 8-ஆம் திகதி நேபாளத்தில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மக்கள் போராட்டங்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர்.