தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பின்னர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார்.
இந்நிலையில், சுற்றுப்பயணத்துக்கான இலச்சினையை த.வெ.க. நேற்று வெளியிட்டுள்ளது. மேலும், அண்ணா, எம்.ஜி.ஆருக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படமும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பேருந்து, நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நா வரேன்’ என்கிற நமது பயணம் தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம். 13 ஆம் திகதி காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, ‘மக்களிடம் செல்’ என்ற அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று ஒவ்வொரு மாவட்டத்துக் கும் வருகிறேன் என குறிப்பிட் டுள்ளார்.