ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் நியூவெலிகம பகுதியில், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று எதிர் திசையில் பயணித்த காருடன் மோதியதில் கோர விபத்து இடம்பெற்றுள்ளது
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஆறு பாலர் பாடசாலை மாணவர்களும் ஒரு ஆசிரியரும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று (12) காலை 8.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியின் முன் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பற்ற உதிரி பாகம், காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
காரை ஓட்டிச் சென்ற பெண் சந்தேகத்தின் பேரில் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேரில், ஒரு பிள்ளையை தவிர ஏனைய ஆறு பேரும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.