Date:

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி குறித்து மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, “கெஹெல்பத்தர பத்மே” நடத்திய போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் சம்பத் மனம்பேரி செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை (Fuel Pass) பெறுவது எப்படி?

எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்:...

Breaking ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள் விநியோகம்!

ஞாயிறு (15) முதல் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் QR முறைப்படி எரிபொருள்...

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...