சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம் தொடர்பில் வெளியிடத் தவறியமை காரணமாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிரத்தியேக செயலாளராகவும் பணியாற்றியுள்ள குறித்த பிரதிவாதிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.