கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கடற்படைத் தளபதி இன்று (10) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடற்படை புலனாய்வு பணிப்பாளராக சேவையாற்றிய காலத்தில், பொத்துஹெர பகுதியில் நடந்த கடத்தல் தொடர்பான விசாரணைக்கு அமைய நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார்