Date:

தேசபந்துக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி நிர்ணயம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இந்த மனுக்கள் இன்று (08) பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த மனுக்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

பேராயர் மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை, இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் 09 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...

வெல்லவாயவில் மற்றுமொரு கோர விபத்து

வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியில், யாலபோவ டிப்போவிற்கு எதிரே இன்று...

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்...

லான்சாவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம்...