இன்று (05) நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து மற்றும் பிரியாணி ஆகிய உணவுகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளன.
அதன்படி குறித்த உணவுகளுக்கு ரூ.25 குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபான சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.
மேலும், அனைத்து வகையான சிற்றுண்டி உணவுகளின் விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்படும்.
இந்த விலைக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் வழங்குமாறு உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.