நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தினமான (ரபீ – உல் அவ்வல் பிறை 12) செப்டம்பர் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று, அண்ணலாரை கௌரவிக்கும் முகமாக, கொழும்பு தாமரைத் தடாகம் பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் ஒளிரவுள்ளது.
இம்முறையும், வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை, தாமரைத் தடாகம் இவ்வாறு ஒளிர்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொழும்பு தாமரைத் தடாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.