கண்டிக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டி, மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்திருந்தாா். ஷ்யமோபாலி மகா நிகாயவின் மல்வத்து விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, ஷ்யமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி விகாரையின் மகாநாயக்க வரக்காகொட ஞானரத்தன தேரர் மற்றும் கெட்டம்பே ராஜோபவனாராமயின் பிரதம பீடாதிபதியான கெப்பெட்டிகொட சிறிவிமல நாயக்க தேரர் ஆகியோரையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளாா்.
தற்போது விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட தற்போதைய பல பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.