மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வணிக இடத்திலிருந்த இளைஞன் ஒருவரை இலக்குவைத்தே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் டி56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.