Date:

சிசுவின் உடல் மாயம்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவொன்றின் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் முதலாம் திகதியன்று தெமட்டகொட பொலிஸ் பிரிவின் மாளிகாவத்தை ரயில்வே பாதையில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சிசுவின் உடலை ஒப்படைத்துள்ளனர்.

குறித்த உடலம் தொடர்பில் கடந்த 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் மரண பரிசோதனை நடத்துவதற்காக தெமட்டகொடை  பொலிஸ் நிலைய அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனை பிணவறைக்குச் சென்று, குழந்தையின் உடலம் தொடர்பில் விசாரித்தபோது, அதன் உடலம் அங்கிருந்து காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதியில் இளைஞனைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம்

மாளிகாவத்தை ஜூம்மா மஸ்ஜித் வீதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக...

ChatGPT யுடன் உரையாடிய நபர் ; தாயைக் கொலை செய்து தன்னுயிரையும் மாய்ப்பு!

AI தொழில்நுட்பமான ChatGPT யுடன் உரையாடிய நபர் ஒருவர் தாயைக் கொலைசெய்து...

பலஸ்தீனுக்கு தனி நாட்டு அந்தஸ்து, இஸ்ரேலுக்கு கடுமையான தடைகள் – பெல்ஜியம் அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக...

ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல்...