மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நகுலுகமுவ மற்றும் மீரிகமவுக்கு இடையே ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்புக்கு பயணிக்கும் வீதியில் 41.1 ஆவது கிலோமீற்றர் பகுதியில் இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் தாங்கி ஊர்தியொன்றும் பாரவுவூர்தியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் எரிபொருள் தாங்கி ஊர்தியின் உதவியாளரும் பாரவூர்தியின் சாரதியுமே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது