பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொலை செய்ய முன்னெடுக்கப்பட்ட திட்டம் பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று (02) மஹரகமவில் வைத்து மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைத் திட்டம் கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டன.