கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று(29) பிற்பகல் இடம்பெறவுள்ளது.
பொரளை – பெல்கம பகுதியில் உள்ள ஆயர் பேரவையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கையின் 12 ஆயர்களும் பங்கேற்கவுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை மற்றும் அதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
Date:
இன்று பேராயரை சந்திக்கும் கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
