குடிவரவு- குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திங்கட்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.
நினைவுக்கல்லில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை. இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பொதுமக்களது நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.