Date:

ஆப்கான் நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 11.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் அஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபதரே மாவட்டங்களில் குறைந்தது 500 பேர் பலியானதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குனார் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கதால் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியுள்ளது’

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அப்பட்டமாக மீறியுள்ளதாக ஹமாஸின் மூத்த உறுப்பினர் இஸ்ஸாத்...

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை...

அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்றதற்காக ரூ.25 மில்லியனுக்கும் அதிகமான அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தயார்! அஜித் பெரேரா அறிவிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைபு மசோதா தயார்...