ஆப்கானிஸ்தான், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 8 கிலோமீட்டர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தினால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.