Date:

அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் தாக்குதல்: தம்பதிக்கு காயம்

அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்ததாக கூறப்படும் தம்பதியினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

கைதான சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

 

விருந்தகத்தன் உரிமையாளரும் அவரது மனைவியும் தங்கள் வாகனத்தில் பயணித்தபோது இரண்டு இஸ்ரேலியர்களும் வீதியை வழிமறித்துள்ளனர். இதனால், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னரே, இஸ்ரேலிய பிரஜைகள் இருவரும் அந்த தம்பதியினரை தாக்கியுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்திய டிக்டொக்

இந்தோனேசியாவில் டிக்டொக் செயலி அதன் நேரடி ஒளிபரப்பைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெற்று...

சமன் ஏக்கநாயக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க...

கோட்டாவுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு...

பிரபல பாடகர் தமித் அசங்க திடீர் கைது

பிரபல பாடகர் தமித் அசங்கவை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்ப தகராறு...