முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் பொலிஸ்மாஅதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலையாக வேண்டிய திகதி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.