பொத்துவில் பகுதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கோமாரி பகுதியில் பாலம் ஒன்றில் பேருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 57 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை துரிதமாக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கெப்பட்டிபொலவிலிருந்து அறுகம்பைக்கு சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.