பேராதெனியவிற்கும், கண்டிக்கும் இடையில் ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக, எதிர்வரும் செப்டெம்பர் 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பேராதனைக்கும் கண்டிக்கும் இடையில் இரண்டு ரயில்கள் மட்டுமே சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட நாட்களில் டிக்கிரி மெனிகே மற்றும் உடரட மெனிகே ஆகிய ரயில்கள் மட்டுமே இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ரயில்களின் மூலம் கண்டி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்குப் பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.