இந்தோனேஷிய பொலிஸாரால் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு வந்த பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு இருவரையும் காவலில் எடுத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்துக்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை நேற்று (29) மாலை இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை சுமார் 5.50 மணியளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைதுசெய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேஷிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.