தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடற்கரை வீதியில் ஒருவரை கழுத்தை நெரித்து கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை 2025.05.10 அன்று இடம்பெற்றுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதன்படி, தெஹிவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (29) இரவு தெஹிவளை பொலிஸ் பிரிவின் சைத்ய வீதி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் என தெரியவந்துள்ளது.






