பண்டாரகம – பொல்கொடை பாலத்திற்கு அருகில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார கொடகொட என்பவர் உயிரிழந்தார்.
அதற்கு உதவியாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (28) ஆம் திகதி பிறபகல் பாணந்துறை, மோதரவில பகுதியில் கைது செய்யப்பட்டு, பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 21 வயதானவர்கள் என்றும் பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து போலி எண் தகடுகள், போலி கடவுச்சீட்டுகள், காப்பீட்டுச் சான்றிதழ், ஆகியவற்றைக் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.