Date:

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் அறிமுக வீரர்களான விஷேன் ஹெலம்பகே மற்றும் கமில் மிஷார ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரத்ன, மஹிஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷா பத்திரன ஆகியோரும் குழாமில் அடங்கியுள்ளனர்.

இலங்கை அணியின் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் நாளை முதலாவது ஒருநாள் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ள அதே நேரத்தில் டி20 தொடர் செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி தொடங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போத்தல் வீசியவர் கைது: நபர் யார் தெரியுமா?

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற...

ரணிலின் மருத்துவ அறிக்கையை பகிரங்கப்படுத்திய ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவிற்கு எதிராக...

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல்...

ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு

ரஷ்யாவில் சில இடங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. யுக்ரேன்...