தாதியர், நிறைவுகாண் மற்றும் இடைநிலை வைத்திய சேவை உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தற்போது தீர்மானித்துள்ள பதவி உயர்வு மற்றும் மண்டல சேவை உள்ளிட்ட கோரிக்கைகுறித்து, நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதுவரையில் சுற்றறிக்கையை வெளியிட முடியாதுபோயுள்ளது.
எனவே கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தங்களது நடவடிக்கையை மீள முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்திய ஆய்வக நிபுணர்கள், ஒளடதவியலாளர்கள், தாதியர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 15 துறைசார் தரப்பினர் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Date:
தொழிற்சங்க நடவடிக்கையில் களமிறங்கும் 15 சுகாதார தொழிற்சங்கங்கள்
