முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, ரணில் விக்கிரமசிங்க இன்றி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள அறையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 500 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியுள்ளனர்.
நீதிமன்ற வளாகத்திலும் பொதுமக்கள் வந்து கூடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஏதாவது அசாதாரண நிலை ஏற்படுமாயின், அதனை தடுப்பதற்காக பொலிஸ் நீர்த்தாரை பிரயோக வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.